Monday, 27 April 2015

ஜீவசமாதி ஓர் அறிமுகம். {பாகம் -2}


---------------------------------------------------------
சிவ சிவ சிவ சிவ நமசிவாய........
........
தவயோகத்தில் சிறந்த ஞானியர் உலக
வாழ்க்கையில் தங்களுடைய
கடமைகள்
முழுமை அடைந்ததாக கருதிடும்
போது
மேலான இறை நிலையோடு
தம்மை
ஐக்கியப்படுத்திக் கொள்கிறார்கள்.
இந்த
நிலையில் அவர்தம் உடல் இயக்கமும்,
மன
இயக்கமும் நின்று
விட்டிருப்பினும், உயிர்
மட்டும் உடலை விட்டு
பிரியாதிருக்கும்.
இத்தகைய உயர்நிலை அடைந்த
ஞானியரின்
உடலுக்குச் செய்திட வேண்டிய
சமாதி
கிரியைகளை இது வரை
பார்த்தோம்.
இதன்படி ஞானியரை குழியில்
பத்மாசனத்தில்
அமர்த்தி பரிவட்டம் சாற்றி
திருவெண்ணீறு,
நறுமண சுண்ணப் பொடி, தர்ப்பைப்
புற்கள்,
வில்வ இலைகள், மலர்களைக்
கொண்டு
குழியை முழுவதுமாய் நிரப்பிட
வேண்டும்
என பார்த்தோம். எக்காரணம்
கொண்டும்
மணலைக் கொண்டு மூடக்கூடாது.
தரை
மட்டம் வருமளவுக்கு மேலே
சொன்ன
பொருட்களைக் கொண்டு குழியை
நிரப்பிய
பின்னர், நிறைவாக பாத்தியம்,
ஆசமனம்,
அர்க்கியம் தந்து நிலத்தின் மேல்
மூன்று அடி
அகலம், மூன்றடி உயரத்தில் மேடை
அமைக்க
வேண்டும் என்கிறார் திருமூலர்.
இப்படி அமைக்கப் பட்ட மேடையின்
மீது அரச
மரக் கன்று அல்லது சிவலிங்கம்
ஒன்றினை
ஸ்தாபிக்க வேண்டுமாம். இப்போது
இது
மாதிரியான அமைப்புடைய
மேடைகளை
பல்வேறு இடங்களில் பார்த்த
நினைவு
உங்களுக்கு வரலாம். ஆம், அவை
எல்லாம்
ஞானியரின் ஜீவசமாதிகளே, காலப்
போக்கில்
அவை பற்றிய தகவல்கள் அடுத்தடுத்த
தலைமுறையினருக்க
ு சென்றடையாமல்
கைவிடப் பட்ட நிலையில்
இருக்கின்றன.
திருமூலர் தான் அருளிய வழியில்
முறையாக
அமைக்கப் பட்ட ஜீவசமாதி உள்ள
இடத்தில்
அந்த ஞானியரின் எண்ண ஆற்றல்கள்
அவரின்
உடலை விட்டுப் பிரியாது
அவ்விடத்தே
சூட்சுமமாய் நிறைந்திருக்குமாம்.
மேலும்
அந்த இடத்திற்கு வருவோரையும்,
வழிபடுவோரையும் ஞானியரின்
எண்ண
ஆற்றல் வழி நடத்தும் என உறுதி
கூறுகின்கிறார்.
நண்பர்களே!, இத்தனை புனிதம்
வாய்ந்த ஜீவ
சமாதிகள் நமது நாட்டில் நிறைய
இருக்கின்றன. அவற்றின்
மகத்துவத்தை
உணராதவர்களாகவே நாம்
இருக்கிறோம்.
இத்தகைய தவசீலர்களை
வணங்குவதன்
மூலம் அவர்களின் அருளுக்கு
பாத்தியமாக
முடியும். தொடர்ந்து இந்த ஜீவ
சமாதிகளை
வணங்கி வந்தால் நாடு வளம்
பெறுவதுடன்,
நாட்டு மக்களுக்கும் நல்லருள்
கிடைக்கும்.
ஜீவசமாதி - சில குறிப்புகள்.
-------------------------------------------
ஜீவசமாதி குறித்த விவரங்கள்
பலருக்கு
புதிய தகவலாய் இருந்திருப்பதை
பின்னூட்டங்கள் மற்றும் தனி
அஞ்சல்களின்
வாயிலாக அறிய முடிந்தது. இந்த
தகவல்கள்
யாவும் காலகாலமாய்
ஏடுகளிலும்,
நூலகங்களில் தூங்கிக்
கொண்டிருக்கும்
தகவல்களே, இதை பகிர்வதில்
எனக்கென
பெருமை எதுவுமில்லை.இப்படி
ஒரு
வாய்ப்பினை எனக்கு அருளிய
எல்லாம் வல்ல
குருவுக்கே அத்தனை புகழும்
சேரும்.
இந்து மரபியலில் ஜீவசமாதியின்
முக்கியத்துவம் தெளிவாக
வரையறுத்து
கூறப் பட்டிருக்கிறது. எனினும்
ஜீவசமாதி
என்பது குறிப்பிட்ட எந்த ஒரு
மதத்திற்குமானது இல்லை.
தமிழகத்தில்
இஸ்லாம் மற்றும் கிருத்துவ
ஞானியரின்
அடக்கத் தலங்கள் புகழ்பெற்ற வணக்கத்
தலமாய் இருப்பதை இதற்கு
உதராணமாய்
காட்டிட முடியும். ஞானத்தின் உச்ச
நிலை
எய்திய ஒருவரை இன்ன மதத்தவர் என
அடையாளம் காட்டிக்
கொண்டிருக்கத் தேவை
இல்லை என்பது என்னுடைய
தாழ்மையான
கருத்து.
ஞானியரின் ஜீவசமாதியில் ஒரு
விளக்கேற்றி
வைத்து, மனதை ஒரு முகப் படுத்தி
தியானத்தில் அமர்ந்திருந்தால
ே அவர்களின்
அருளுக்கு பாத்தியமாக
முடியும். ஆனால்
தற்காலத்தில் இவை எல்லாம்
புறக்கணிக்கப்
பட்டு வழிபாடுகள், ஆராதனைகள்
என
சடங்குகள் சார்ந்த ஒரு வைபவமாக
மாற்றப்
பட்டுவிட்டது வருந்தத் தக்கது.
எமது நாட்டிலும் கூட பல
ஞானியரின்
ஜீவசமாதிகள் அமைந்திருக்கின்றன.
கடந்த
காலத்தின் அசாதாரண
நிகழ்வுகளினாலும்,
தற்போதைய அரசியல்
சூழலினாலும்
அவற்றில் பல அழிந்ந்தும்,
பராமரிப்பு அற்றும்
போய்விட்டன. எஞ்சிய ஒரு சில
ஜீவசமாதிகள்
அருளாளர்களினால் போற்றிப்
பாதுகாக்கப்
பட்டு வருகிறது.
சமாதி நிலை என்பது எந்த வித
எண்ணங்களும் இல்லாது கண்களை
மூடி
அமர்ந்திருப்பது என்பதாகவே நம்மில்
பலரும்
புரிந்து கொண்டிருக்கிறோம்.
உண்மையில்,
சமம் + ஆதி = சமாதி, அதாவது
ஆதியும்
அந்தமுமாய் சொல்லப்படுகிற இறை
நிலைக்கு சமனான ஒன்றுமற்ற
அல்லது
வெறுமையான மனநிலையில்
இருப்பதே
சமாதி எனப்படும்.
இன்னொரு வகையில்
சொல்வதானால்,
கண்ணை திறந்து கொண்டு
அனைத்து
நிகழ்வுகளிலும் பங்கேற்று
கொண்டே,
உள்ளார்ந்த விழிப்புணர்வுடன்
"நான்" "எனது"
"என்னுடையது" என்ற அகங்காரம்
இல்லாத
பக்குவமும் சமாதி நிலையாக
சொல்லப்
படுகிறது.
இதனை திருமூலர் தனது
திருமந்திரத்தில்
பின் வருமாறு கூறுகிறார்.
"சமாதி யமாதியிற் றான்செல்லக்
கூடும்
சமாதி யமாதியிற் றானெட்டுச்
சித்தி
சமாதி யமாதியிற் றங்கினோர்க்
கன்றே
சமாதி யமாதி தலைப்படுந் தானே"
- திருமந்திரம் -
"சமாதிசெய் வார்க்குத் தகும்பல
யோகஞ்
சமாதிகள் வேண்டாம் இறையுடன்
னேகிற்
சமாதிதா னில்லை தானவ னாகிற்
சமாதியில் எட்டெட்டுச் சித்தியும்
எய்துமே"
- திருமந்திரம் -
இந்த நிலை எல்லோருக்கும்
சாத்தியமில்லை.
குருவருளுடன் கூடிய
விடாமுயற்சியும்,
பயிற்சியுமே இந்த நிலைக்கு
இட்டுச்
செல்லும். பதஞ்சலி முனிவர் தனது
பதஞ்சலி
யோகம் என்னும் நூலில் சாமாதி
நிலைக்கு
இட்டுச் செல்லும் எட்டுப்
படிநிலைகளின்
வகைகளை விரிவாக
அருளியிருக்கிறார். அது
தொடர்பான பதிவுகளை இந்த
இணைப்பில்
வாசிக்கலாம்.
கொங்கணவர் தனது “கொங்கணவர்
வாதகாவியம்” என்ற நூலில் சமாதி
நிலைகளைப் பற்றி விரிவாக
விளக்கியிருக்கிறார்.
ஆறுவகையான சமாதி
நிலைகள் இருப்பதாக கொங்கணவர்
குறிப்பிடுகிறார்.
அவையாவன...
தத்துவல்ய சமாதி
சவிகற்ப சமாதி
நிருவிகற்ப சமாதி
அகண்டவிர்த்தி சமாதி
சஞ்சார சமாதி
ஆரூட சமாதி
இனிவரும் பதிவுகளில் இவற்றைத்
தனித்தனியாகவும்,
விளக்கமாகவும்
பார்ப்போம்.

No comments:

Post a Comment