Monday, 27 April 2015

ஜீவசமாதி ஓர் அறிமுகம். {பாகம் -1}


---------------------------------------------------------
சிவ சிவ சிவ சிவ நமசிவாய.............
சித்தர்கள், யோகிகள், ஞானிகள்
போன்ற உயர்
தவநெறியாளர்களின் உடலை அடக்கம்
செய்வித்த இடமே ஜீவசமாதி என
பொதுவாக
அழைக்கப்படுகிறது. இந்து ஞான
மரபில் இந்த
ஜீவ சமாதிகள் கோவில்களுக்கு
இணையான
புனிதத் தன்மை உடையவையாக
கருதப்
படுகிறது. நம்மில் பலரும் ஜீவ
சமாதி
என்றால் ஞானியரை உயிருடன்
புதைக்கப்
படுதல் என்றே நினைத்துக்
கொண்டிருக்கின்றனர். ஆனால் அது
மிகவும்
தவறான கருத்து என்கிறார்
திருமூலர்.
ஜீவசமாதிகள் அமைந்திருக்கும்
இடத்திற்குச்
சென்றால் அனைத்தையும் மறந்த
ஏகாந்த
உணர்வு உண்டாகிறது. மனம்
அமைதியில்
திளைக்கிறது. சிலிர்ப்பூட்டும்
அதிர்வலைகளை உணர முடிகிறது.
நோயுற்றவர்களின் நோய்
தீருகிறது.
வேண்டுதல் நிறைவேறுகிறது.
வாழ்வில்
மாற்றம் உண்டாகிறது என பலரின் பல
விதமான அனுபவங்களை
கேட்டிருப்போம்.
இத்தனை சிறப்புக்களை தன்னகத்தே
கொண்டிருக்கும் ஜீவசமாதியின்
தத்துவம்
மற்றும் அதன் அடியாதாரங்களை
பகிர்வதே
இந்தக் குறுந்தொடரின் நோக்கம்.
ஞானியர் மேலான தவம் மற்றும்
கடுமையான
ஒழுக்க நெறிகளை பின்பற்றுவதன்
மூலம்
தமது உடலையும், உயிரினையும்
தூய்மையாக பேணி வருகிறவர்கள்.
இன்னும்
தீர்க்கமாய் சொல்ல வேண்டுமெனில்
உடலையும், உயிரையும்
புனிதமான
கோவிலைப் போல கருதி
தனித்துவமான
வாழ்வியல் கூறுகளை
அனுசரிக்கிறவர்கள்.
இத்தகைய மேன் மக்கள், இந்த உலக
வாழ்க்கையில் தங்களுடைய
கடமைகள்
முழுமை அடைந்ததாக கருதும்
நிலையில்
தம்மை இறைவனோடு
ஐக்கியப்படுத்திக்
கொள்கிறார்கள்.
இந்த நிலையில் அவர்களின் உடல்
இயக்கமும்,
மன இயக்கமும் நின்று
விட்டிருப்பினும், உயிர்
மட்டும் உடலை விட்டு
பிரியாதிருக்கும்
என்கிறார் திருமூலர். இத்தகைய
நிலையே
ஜீவ சமாதி என்கிறார். ஜீவ சமாதி
என்பதை
ஜீவன் + சமம் + ஆதி. அதாவது ஆன்மா
தனது
ஆதி வடிவத்திற்கு சமனாக உயர்வது
என
பொருள் கொள்ளலாம். இந்த உயரிய
நிலையில் ஞானியரின் உடல்
என்றும்
கெடாமல் இருக்குமாம்.
இப்படி ஆதிக்கு சமன் ஆகி விட்ட
ஞானிகளை
இறைவனாகவே கருத வேண்டும்
என்றும்,
அத்தகைய மேன் மக்களை அவரின்
சீடர்களின்
உதவியோடு பிரத்தியேகமான
சடங்குகளை
செய்வித்து அவர்களின் உடலை
சமாதி செய்ய
வேண்டும் என்கிறார் திருமூலர்.
இவ்வகை
சடங்கிற்கு "சமாதிக் கிரியை"
என்று பெயர்.
இந்த சடங்கு விவரங்களை தனது
திருமந்திரத்தில் விரிவாகவே
கூறியிருக்கிறார்.
ஜீவசமாதி - ஏன்!, எதற்கு!, எங்கே!
------------------------------------------------------
தவயோகத்தில் சிறந்து தெளிந்த
ஞானியரின்
உடலை ஜீவ சமாதி அமைத்திட
வேண்டியதன்
அவசியத்தை மற்றெவரையும் விட
திருமூலர்
வலியுறுத்திக் கூறுகிறார்.
அதற்கான காரண
காரியங்களும் அவரது பாடல்களின்
ஊடே நாம்
காணக் கூடியதாக இருக்கிறது.
அதனை அவரது வரிகளிலேயே
பார்ப்போம்....
அந்தமில் ஞானி அருளை
அடைந்தக்கால்
அந்த உடல்தான் குகைசெய்
திருத்திடில்
சுந்தர மன்னரும் தொல்புவி
யுள்ளோரும்
அந்தமில் இன்ப அருள்பெறு வாரே
புண்ணிய மாம்அவர் தம்மைப்
புதைப்பது
நண்ணி அனல்கோக்கில் நாட்டில்
அழிவாகும்
மண்ணி லழியில் மலங்காரப்
பஞ்சமாம்
மண்ணுல கெல்லா மயங்குமனல்
மண்டியே
ஜீவ சமாதி அடைந்த ஞானியரின்
உடலை குழி
தோண்டி அதில் இருத்தி
புதைத்தலே
புண்ணியம் என்கிறார். மாறாக அந்த
உடலை
எரித்தால் பஞ்சம் ஏற்பட்டு நாட்டில்
கேடுகள்
விளைந்து, மக்களுக்குள் போர்
மூண்டு,
ஒருவரை ஒருவர் அழித்துக்
கொள்வர்
என்கிறார்.
அந்த மிலாஞானி தன் ஆகம் தீயினில்
வெந்திடில் நாடெலாம் வெந்திடும்
தீயினில்
நொந்தது நாய்நரி நுங்கிடில்
நுண்செரு
வந்துநாய்ந ரிக்குண வாம்வை
யகமே
எண்ணிலா ஞானி யுடல்எரி
தாவிடில்
அண்ணல்தன் கோயில் அழலிட்ட
தாங்கொக்கும்
மண்ணில் மழைவிழா வையகம்
பஞ்சமாம்
எண்ணரு மன்னர் இழப்பர் அரசே
ஞானியரின் உடலை புதைக்காமல்
நிலத்தின்
மேல் கேட்பாரற்று அழிந்துப் போக
விட்டாலும் அந்த நாட்டில் மழை
பொய்த்து,
பெரும் பஞ்சம் ஏற்படுமாம். அரசனும்
தன்
பதவி இழப்பான் என்கிறார்.
எனவே ஞானியரின் உடலை சமாதி
கிரியை
என்னும் சடங்குகளின் படி
புதைத்து
விடுவதே உத்தமம் . இந்த
சமாதிகளை
அமைப்பதற்கான இடங்களை
தேர்ந்தெடுப்பது
பற்றியும் திருமூலரின்
பாடல்களில்
குறிப்புகள் காணக்
கிடைக்கின்றன.
தன்மனை சாலை குளங்கரை
யாற்றிடை
நன்மலர்ச் சோலை நகரில்நற் பூமி
உன்னருங் கானம் உயர்ந்த
மலைச்சாரல்
இந்நிலந் தான்குகைக் கெய்தும்
இடமே
வீட்டின் அருகில், நடைபாதை, குளக்
கரை,
ஆற்றின் நடுப்படுகை, மலர்கள்
பூத்துக்
குலுங்கும் பசுஞ் சோலை, நகரின்
மத்தியில்
நல்லதோர் இடம், அடர்ந்த காடுகள்,
மலைச்
சாரல் போன்ற இடங்களில் ஜீவ சமாதி
அமைக்க உகந்த இடங்கள் என்கிறார்
திருமூலர்.
எல்லாம் சரிதான், இப்போது எப்படி
குழி
தோண்டுவது?, அதில் ஞானியரின்
உடலை
எப்படி இருத்துவது?
ஜீவசமாதி - நிலவறையும்,
சடங்குகளும்
----------------------------------------------------------------
ஜீவசமாதி பற்றிய அறிமுகம் மற்றும்
அதன்
அவசியத்தையும் இது வரை
பார்த்தோம்.
இன்று "சமாதி கிரியைகள்"
குறித்த
விவரங்களை பகிர்ந்து
கொள்கிறேன். இதன்
முதல் கட்டமாக ஞானியர் உடலை
வைக்கும்
குழியினை அமைக்க வேண்டும்.
இதனை
நிலவறை என்கின்றனர். இந்த
நிலவறையை
அமைக்கும் முறையை திருமூலர்
பின்
வருமாறு விளக்குகிறார்.
நவமிகு சாணாலே நல்லாழம்
செய்து
குவைமிகு சூழலைஞ் சாணாகக்
கோட்டித்
தவமிகு முட்குகைமுக் கோணமுச்
சாணாக்கிப்
பவமறு நற்குகை பத்மா சனமே
ஒன்பது சாணுக்கு குறையாத
ஆழமும்,
மூன்று சாண் அகலத்தில்
முக்கோண வடிவில்
குழி தோண்டிட வேண்டுமாம்.
இப்படித்
தோண்டிய மணலை குழியைச்
சுற்றி ஐந்து
சாணுக்கு அப்பால் வளைத்து
கொட்ட
வேண்டும் என்கிறார். இப்படி
அமைக்கப் பட்ட
குழியை “குகை” அல்லது “நில
அறை”
என்று அழைக்கின்றனர்.
பஞ்சலோ கங்கள் நவமணி பாரித்து
விஞ்சப் படுத்ததன் மேல்ஆ சனமிட்டு
முஞ்சி படுத்துவெண் ணீறிட்
டதன்மேலே
பொன்செய்நற் சுண்ணம் பொதியலு
மாமே
நள்குகைநால் வட்டம் படுத்ததன்
மேற்காகக்
கள்ளவிழ் தாமம் களபம்கத் தூரியும்
தெள்ளிய சாந்து புழுகுபன்
னீர்சேர்த்து
ஒள்ளிய தூபம் உவந்திடு வீரே
இவ்வாறு அமைக்கப் பட்ட குழியில்
பஞ்சலோகம் மற்றும் நவமணிகளை
குழியின்
ஆழத்தில் முக்கோண வடிவில் பரப்பி,
அதன்
மீது தர்ப்பைப் புற்களை விரித்து
வெண்ணீற்றையும், பொன்னிற
சுண்ணப்
பொடியையும் கொட்டி நிரப்பி
இருக்கை
அமைக்க வேண்டும். மலர்கள், சந்தனம்,
கஸ்தூரி ஆகியவற்றுடன் சாந்து,
புனுகு,
பன்னீர் கலந்து மேலே குழியைச்
சுற்றி
சதுரமாய் தெளித்து தீபம் ஏற்றி
வைத்திட
வேண்டுமாம்.
இப்போது குழியினை அமைத்து,
அதனுள்
வைக்க வேண்டியவைகளை
வைத்தாயிற்று,
அடுத்து....
ஓதிடு வெண்ணீற்றால் உத்தூளம்
குப்பாயம்
மீதினில் இட்டா சனத்தினின்
மேல்வைத்துப்
போதுறு சுண்ணமும் நீறும்
பொலிவித்து
மீதி லிருத்தி விரித்திடு வீரே.
சமாதி அடைந்த ஞானியின் உடல்
மீது
திருநீற்றைக் குப்பாயம் (மேல்
சட்டை) போல்
பூசிய பின்னர் அவரது உடலை
பத்மாசனத்தில் அமர்த்தி
குழியினுள் இறக்கி
வைத்திட வேண்டுமாம். இப்போது
அவரது
உடலைச் சுற்றி பூக்கள்,
அறுகம்புல்,
சுண்ணப்பொடி, திருவெண்ணீறு
ஆகியவற்றை
போட வேண்டும் என்கிறார்.
விரித்தபின் நாற்சாரும் மேவுதல்
செய்து
பொரித்த கறிபோ னகம்இள நீரும்
குருத்தலம் வைத்தோர் குழைமுகம்
பார்வை
தரித்தபின் மேல்வட்டம் சாத்திடு
வீரே
மீது சொரிந்திடும் வெண்ணீறும்
சுண்ணமும்
போது பலகொண்டு தர்ப்பைப்புல்
வில்வமும்
பாத உதகத்தால் மஞ்சனம் செய்துபார்
மீதுமூன் றுக்குமூன் றணிநிலம்
செய்யுமே
ஆதன மீதில் அரசு சிவலிங்கம்
ஓதும் இரண்டினில் ஒன்றினைத்
தாபித்து
மேதகு சந்நிதி மேவுத் தரம்பூர்வம்
காதலிற் கோடல் காண்உப சாரமே
மேலே சொன்ன செய்முறைகளை
எல்லாம்
செய்த பின்னர் குழியினுள்
பத்மாசனத்தில்
இருத்தப் பட்ட குருவின்
திருவடியில்
பொரிக்கை, போனகம் (உணவு),
இளநீர்
ஆகியவற்றை வைத்திட
கூறுகிறார்
திருமூலர்.அதைத் தொடர்ந்து
அவரின் முகம்,
காதணி, கண் ஆகியவைகளை மூடி,
ஞானியின் உடல் மீது பரிவட்டம்
சாற்றிட
வேண்டும். இறுதியாக
திருவெண்ணீறு,
நறுமண சுண்ணப் பொடி, தர்ப்பைப்
புற்கள்,
விலவ இலைகள், மலர்களைக்
கொண்டு
குழியை முழுவதுமாய் நிரப்பிட
வேண்டுமாம்.
ஆச்சர்யமான தகவல்தானே.....

No comments:

Post a Comment